கடும் காற்று : திருகோணமலை மாவட்டத்தில் 18 வீடுகள் சேதம் – மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் தகவல்!

திருகோணமலை மாவட்டத்தில் வீசிய கடும் காற்று காரணமாக 18 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் குணதாஸ் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் திருகோணமலை மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக 3 மீனவர்கள் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக கந்தளாய் பிரதேசத்தில் 5 வீடுகளும், சேருவில பிரதேசத்தில் 8 வீடுகளும், குச்சவெளி பிரதேசத்தில் மூன்று வீடுகளும் தம்பலகாமம் பிரதேசத்தில் இரண்டு வீடுகளும், சேதமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் 18 குடும்பங்களைச் சேர்ந்த 73 உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
முதலாளிக்கு சமுர்த்தி முத்திரை அவருக்கு கீழ் பணியாற்றுபவருக்கு இல்லை: பாகுபாடு நீக்கப்பட வேண்டும் - ...
காணி உரிமத்தை பெற்றுத்தந்து வாழ்வுக்கு உத்தரவாதம் பெற்றுத் தாருங்கள் - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம்...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வேம்படி மகளிர் கல்லூரி மண்டபத்தில் நஷ்ட ஈடு வழங்கும் நிகழ்வு- தவ...
|
|