கடுமையான வெப்பத்திலிருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாக்க சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்கள் வெளியானது!
Friday, April 21st, 2023
நிலவும் கடும் வெயிலின் பாதகமான விளைவுகள் பாடசாலை மாணவர்களுக்கு ஏற்படுவதை தடுக்கவும், அவர்களை பாதுகாப்பாக வைத்திருக்கவும் சுகாதார அமைச்சகம் வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
கல்வி அமைச்சின் மேலதிக செயலாளருக்கு (பாடசாலை விவகாரங்கள்) அனுப்பிய கடிதத்தில் சுகாதார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
அதன்படி, பின்வரும் வெப்பம் தொடர்பான நோய்களுக்கான முதலுதவி நடவடிக்கைகளை அமைச்சு பரிந்துரைத்துள்ளது:
• வெப்ப பிடிப்புகள் (Heat cramps) வெப்பமான சூழலில் அதிக உடற்பயிற்சியின் போது ஏற்படும் இது ஏற்படுகிறது
இதன் அறிகுறிகள்: வலிமிகுந்த தசைப்பிடிப்பு மற்றும் பொதுவாக கால்கள் மற்றும் வயிற்றில் பிடிப்புகள் மற்றும் அதிக வியர்வை கோன்றனவாகும்.
இதற்கான முதலுதவி: தண்ணீர் குடிப்பது (ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் அரை கிளாஸ் தண்ணீர்) மற்றும் வெப்ப பிடிப்புகளுக்கு முதலுதவியாக அனைத்து நடவடிக்கைகளிலிருந்தும் விலகுதல்.
அடத்ததாக வெப்ப சோர்வு (Heat exhaustion) இது அதிக வெப்பத்தால் ஏற்படும் அதிக சோர்வு இதன் அறிகுறிகள்: அதிக வியர்வை, பலவீனம் அல்லது சோர்வு, குளிர், வெளிரல், ஈரமான தோல், வேகமான, பலவீனமான நாடித்துடிப்பு, தசைப்பிடிப்பு, தலைச்சுற்றல், குமட்டல் அல்லது வாந்தி, தலைவலி, மயக்கம் போன்றனவாகும்.
இதற்கான முதலுதவி: அனைத்து நடவடிக்கைகளிலிருந்தும் விலகுதல், குளிர்ச்சியான சூழலுக்குச் செல்லுதல், போதுமான அளவு தண்ணீர் குடித்தல் (ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் அரை கிளாஸ் தண்ணீர்), குளித்து, ஈரமான துணியை உடலில் தடவவுவதுமாகும்
இதேவேளை வெப்ப அதிர்ச்சி (Heat stroke) இது வெப்பம் தொடர்பான நோயின் மிகக் கடுமையான வடிவம். உடலின் வெப்பத்தை ஒழுங்குபடுத்தும் அமைப்பு அதிக வெப்பத்தால் கடினமாக இருக்கும்போது இது நிகழ்கிறது.
இது மருத்துவ கவனிப்பு தேவைப்படும் உயிருக்கு ஆபத்தான அவசரநிலை. ஆம்புலன்ஸ் சேவைக்கு அருகில் உள்ள மருத்துவமனை அல்லது சுவ செரியாவை (ஹொட்லைன் 1990) தொடர்பு கொள்ளவும்.
இதன் அறிகுறிகள்: தலைவலி, குழப்பம், குமட்டல், தலைச்சுற்றல், உடல் வெப்பநிலை 103 டிகிரிக்கு மேல், சூடான, சிவந்த, உலர்ந்த அல்லது ஈரமான தோல், விரைவான மற்றும் வலுவான துடிப்பு, மயக்கம், சுயநினைவு இழப்பு கோன்றனவாகும்
இதற்கான முதலுதவி: குளிர்ச்சியான சூழலுக்குச் செல்லுதல், ஈரமான துணியால் உடல் வெப்பநிலையைக் குறைத்தல் போன்றன.
முடிந்தவரை வெளியில் உடலியக் செயல்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறும் முடிந்தளவு தண்ணீர் குடிக்குமாறும் பாடசாலை மாணவர்களை சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், மாணவர்கள் அதிக ஓய்வெடுக்க இரண்டு குறுகிய இடைவெளிகளை வழங்கவும், பகலில் அவர்களை வெளியில் அழைத்துச் செல்ல வேண்டாம் என்றும், அதிக வெப்பமான காலநிலை நிலவும் போது விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் பயிற்சி அமர்வுகளை நடத்த வேண்டாம் என்றும் பாடசாலை அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
மேலும், பாடசாலையில் குடிநீர் வசதிகள் போதுமானதாக இல்லை என்றால் உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் அறிவித்தலில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


