கடுமையான போக்குவரத்து சிரமங்கள்: வாரத்தில் 4 நாட்கள் தபால் சேவை மேற்கொள்ள தீர்மானம் – தபால்மா அதிபர் அறிவிப்பு!

Tuesday, September 14th, 2021

தபால் சேவைகள் இடம்பெறும் நாட்களை மட்டுப்படுத்த தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அத்துடன் நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்

தாபால் சேவையை அத்தியாவசிய சேவையாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ள நிலையில், வாரத்தில் ஆறு நாட்களுக்கு பணி நிமித்தம் அலுவலகங்களை திறக்க கடந்ததினம் தீர்மானிக்கப்பட்டது.

இருப்பினும், கடுமையான போக்குவரத்து சிரமங்கள் இருப்பதால், அந்த நிலையை பராமரித்துச் செல்ல கடுமையான தடைகள் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி, தொழிற்சங்கங்கள் மற்றும் அதிகாரிகளின் உடன்பாட்டுடன், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் இரண்டு நாட்களுக்கு அலுவலகங்களை மூடவும், வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே தபால் சேவைகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காலப்பகுதியில், சுமார் 500 ஊழியர்கள் கொரோனவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் விளைவாக சுமார் 50 அலுவலகங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.

இந்நிலையில் முதியோர் கொடுப்பனவுகள் உள்ளிட்ட கொடுப்பனவுகள் எதிர்வரும்  17 மற்றும் 18 ஆம் திகதிகளில் வழங்கப்படும் என்றும் தபால் மா அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

துன்பங்களிலிருந்து மக்களை மீட்டெடுக்க நத்தார் வழிவகை செய்யட்டும் – வாழ்த்துச் செய்தியில் ஈ.பி.டி.பிய...
வடக்கு - வடகிழக்கு பகுதிகளை நோக்கி நகர்கின்றது பாரிய சூறாவளி - பொதுமக்களிற்கு அவசர எச்சரிக்கை விடுக...
ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக நாளை டெல்லி வருகிறார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் - அதிகார பூர்...