துன்பங்களிலிருந்து மக்களை மீட்டெடுக்க நத்தார் வழிவகை செய்யட்டும் – வாழ்த்துச் செய்தியில் ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் V.K.ஜெகன்!

Tuesday, December 25th, 2018

அழிவு யுத்தத்திலிருந்து மீண்டெழுந்த எமது மக்களை மீண்டும் இயற்கை அனர்த்தம் பெரும் துன்பங்களுக்குள்ளாக்கியுள்ளது. இந்த பேரவலத்தினாலும் தொடர்ந்துவரும் துன்பங்களாலும் அவலப்படும் எமது மக்களுக்கு இந்த பாலன் பிறப்பாவது நிரந்தர அமைதிக்கு வழிவகை செய்ய வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் தெரிவித்துள்ளார்.

நத்தார் தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள செய்திக் குறிப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

எமது மக்கள் யுத்த மற்றும் இயற்கை அழிவுகளின் பின்னர் தமது வாழ்வில் ஓரளவு மீட்சி பெற்றிருந்த நிலையில் மீண்டும் அவர்களை இயற்கையும் துன்பங்களுக்கு உள்ளாக்கியுள்ளது.  யுத்த சூழலுக்குள் இருந்து தப்பித்த எமது உறவுகள் இன்று இயற்கையின் சீற்றத்தால் மீண்டும் ஒருதடவை கண்ணீர் வடித்து நிற்கின்றனர்.

இந்த மக்களின் காயங்கள் துடைக்கப்பட வேண்டும் என்பதுடன் அனைத்து மக்களும் நிரந்தரமாக அமைதியான வாழ்வு வாழவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

அழிவு யுத்தம் நாட்டில் நடைபெற்றுவந்த சமயத்திலும் நாம் மக்களின் வறுமை நிலையை அகற்றி சமாதானத்தையும் அமைதியையும் மக்களிடம் கொண்டுசெல்லவே கடுமையாக உழைத்திருந்தோம். இதனூடாக மக்களுக்கு ஒரு நம்பிக்கையை நாம் ஏற்படுத்தியும் இருந்தோம்.

இந்த நம்பிக்கையூடாக எமது மக்களுக்கு நடைமுறைச் சாத்தியமான வழிமுறையில் எல்லா பிரச்சினைகளில் இருந்தும் விடுவிப்பதற்கு நாம் தொடர்ந்தும் உழைக்க தயாராகவே இருக்கின்றோம்.

யேசு பாலன் பிறப்பெடுத்த இத்தினத்தை உலகெங்கும் வாழும் மக்களுடன் இணைந்து எமது மக்களும் துன்பங்களுக்கு மத்தியிலும் நம்பிக்கையோடு கொண்டாடி வருகின்றார்கள்.

அந்தவகையில் சமாதானத்தின் வடிவாக கருணை மைந்தன் யேசு பாலன் பிறந்த இத்தினத்தில் உங்கள் இல்லங்களின் வாசல்தோறும் நிரந்தர விடியலின் சமாதான ஒளி வீசவும், நிரந்தர அமைதி மலரவும் இந்த நத்தார் தினம் வழிவகை செய்யும் என நம்புவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: