வடக்கு – வடகிழக்கு பகுதிகளை நோக்கி நகர்கின்றது பாரிய சூறாவளி – பொதுமக்களிற்கு அவசர எச்சரிக்கை விடுக்கிறது வானிலை அவதான நிலையம்!

Monday, May 18th, 2020

வங்கக்கடலில் ஏற்பட்ட தாழமுக்கத்தால் உருவான அம்பான் என்ற பாரிய சூறாவளியானது விருத்தியடைந்து இன்று அதிகாலை திருகோணமலைக்கு வடகிழக்காக ஏறத்தாழ 740 கி.மீ தூரத்தில் தென்வங்காள விரிகுடா மத்திய பகுதி கடற்பரப்புகளுக்கு அண்மையாக  கொண்டுள்ளது.

இது அடுத்த 06 மணித்தியாலங்களில் ஒரு மிக பாரிய சூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் இந்த சூறாவளி மே 20 ஆம் திகதியளவில் வடக்கு – வடகிழக்கு திசையில் மேற்கு வங்காள கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது

இதன் தாக்கம் காரணமாக நாடு முழுவதும், குறிப்பாக நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை தொடர்ந்து நிலவும் எனவும் வானிலை அவதான நிலையத்தால் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மேலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: