விதிமுறைகளை மீறினால் கடுமையான நடவடிக்கை – சுற்றுலாப் பயணிகளுக்கு சுற்றுலாத்துறை எச்சரிக்கை!
Thursday, January 21st, 2021
சுற்றுலாப் பயணிகள் சுகாதார விதிமுறைகளை மீறிச் செயற்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை சுற்றுலாத்துறையினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிகாரபூர்வமாக இன்றையதினம் சுற்றுலாப் பயணிகளுக்காக இலங்கை திறக்கப்பட்டுள்ளது. அத்துடன் எதிர்வரும் ஆறு மாத காலப் பகுதிகளுக்குள் சுற்றுலாத்துறையை பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு எதிர்பார்ப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கொவிட் தொற்று நிலைமை தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகளை மீறிச் செயற்பட்டால் பயண முகவர் நிறுவனங்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வாடிக்கையாளரை எச்சரிக்கும் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை!
மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்படும் - அமைச்சர் ராஜித்த!
இரு வாரங்களில் கொரோனா தடுப்பூசியை அண்டை நாடுகளுக்கு வழங்கப்படும் – இந்தியா நடவடிக்கை!
|
|
|


