கடினமான காலங்களில் நாம் செய்ய வேண்டிய விடயங்களைச் செய்து அதிர்ஷ்டமான எதிர்காலத்தை நோக்கி பயணிப்போம் – நீர்ப்பாசன அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவிப்பு!

Sunday, February 27th, 2022

இக்கட்டான காலத்தை கடந்து செல்லும் நாம் எதிர்காலத்தை இலகுவான காலமாக கருதலாம் என தெரிவித்துள்ள நீர்ப்பாசன அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நாம் முன்னேறிச் செல்கிறோம். கடினமான காலங்களில் நாம் செய்ய வேண்டிய விடயங்களைச் செய்து மேலும் அதிர்ஷ்டமான எதிர்காலத்தை நோக்கி பயணிப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

கிரம – கட்டுவன ஒருங்கிணைந்த நீர் வழங்கல் திட்டம் மற்றும் கிரம பேருந்து நிலையம் ஆகியவற்றை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

மேலும் நாங்கள் மிகவும் கடினமான காலத்தை கடந்து வருகிறோம். இன்று முழு உலகமும் தொற்று நோயின் எதிரொலியினால் பணவீக்கம் அல்லது விலைவாசி உயர்வு போன்ற நெருக்கடியில் உள்ளது.

நமது பிரதமரின் வழிகாட்டலுக்கு அமைய இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதே நாம் செய்ய வேண்டியிருந்தது. எங்களால் எதையும் தொடங்க முடியாத அளவுக்கு இந்த தொற்றுநோய் வெடித்தது.

ஆனால் அந்த சவாலை நாங்கள் முறியடித்தோம். இந்த சவாலை முறியடித்த உலக நாடுகளில் ஒன்றாக இலங்கை இன்று மிளிர்கிறது. அதற்குக் எமக்கு வழங்கப்பட்ட தலைமையே காரணம். அத்துடன் இலங்கை முழுவதும் பரந்துள்ள எமது சுகாதார வலையமைப்பும் காரணம். அபிவிருத்தியடைந்த நாடுகளிலேயே இத்தகைய சுகாதார வலையமைப்பு உள்ளது.

இக்கட்டான காலத்தை கடந்து செல்லும் நாம் எதிர்காலத்தை இலகுவான காலமாக கருதலாம். இவ்வதறாகவே நாம் முன்னேறிச் செல்கிறோம். கடினமான காலங்களில் நாம் செய்ய வேண்டிய விடயங்களைச் செய்து, மேலும் அதிர்ஷ்டமான எதிர்காலத்தை நோக்கி பயணிப்போம் என அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000.

Related posts:

நாளை பிற்பகலுக்கு பின்னர் தபால் மூல வாக்கு பெறுபேறுகள் வெளியாகும் - தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!
கோப்பாய் இளைஞர் மீது தாக்குதல் விவகாரம் - உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட 5 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு...
குருதி சீராக்கத்திற்கான உபகரண பற்றாக்குறை விரைவில் நிவர்த்திக்கப்படும் - சுகாதார அமைச்சர் கெஹெலிய தெ...

இருதய நெஞ்சறை சத்திர சிகிச்சைகளை இரட்டிப்பாக்க முயற்சிக்கின்றோம் - யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலை பணி...
யாழ் மாவட்டத்தில் ஊசி மூலம் போதைப்பொருளை ஏற்றும் போக்கு அதிகரித்துள்ளது - மாவட்ட செயலாளர் அம்பலவாணர்...
எதிர்கட்சிகள் எந்த வகையான விமர்சனங்களை முன்வைத்தாலும் புதிய பொருளாதார மறுசீரமைப்புக்களின் பலன்கள் மக...