கடலுக்கு சென்ற இருவர் கரை திரும்பவில்லை – கண்ணீரால் சோகமயமானது அனலைதீவு!
Wednesday, June 12th, 2024
அனலைதீவு கடற்பரப்பில் தொழிலுக்காக கடலுக்கு சென்றிருந்த இருவர் இதுவரை கரை திரும்பாததால் அனலைதீவு பெரும் சோகமயமானதாகியுள்ளது.
இன்நிலையில் அனலைதீவில் இருந்து கடற் கடற்தொழிலுக்கு சென்று காணமல் போன இருவரது குடும்பத்தினரது இல்லங்களுக்கும் சென்ற ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் தேடுதல் நடவடிக்கைகள் மற்றும் நிலைமைகள் குறித்து அவதானம் செலுத்தியதுடன் குடும்பத்தினருக்கும் ஆறுதலையும் தெரிவித்துள்ளனர்.
நாடின் கடற்பரப்புகளில் சீரற்ற காலநிலை தொடரும் நிலையில் அனலைதீவில் இருந்து நேற்றுமுந்தினம் (ஜூன்10) மாலை 5.00 மணியளவில் கடற் கடற்தொழிலுக்கு சென்ற இருவர் கரைதிரும்பாததால் அனலைதீவு கடற்பரப்பெங்கும் கடற்படையினர் மற்றும் கடற்றொழிலாளர்களால் பெருமெடுப்பில் தேடுதல் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
குறித்த சம்பவத்தில் அனலைதீவைச் சேர்ந்த திருச்செல்வம் மைக்கல் பெனாண்டோ,நாகலிங்கம் விஜயகுமார் என்ற இருவரே இதுவரை கரை திரும்பாததால் குடும்பத்தினரும் கடற்றொழிலாளர்ளும் பெரும் பதற்றமடைந்துள்ளனர்.
இதேநேரம் கடற்படையினர் மற்றும் உறவினர்களும் , ஊர்மக்களும் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளபோதும் இதுவரை எந்த தகலும் கிடைக்காதுள்ளது.
இந்த நிலையில் குறித்த செய்தியறிந்து இன்று காலை அனலைதீவு சென்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் கந்தசாமி கமலேந்திரன், ஊர்காவற்றுறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் குறித்த பிரதேசத்தின் நிர்வாக செயலாளருமான மருதயினார் ஜெயகாந்தன், கட்சியின் யாழ் பிரதேசத்தின் நிர்வாக செயலாளரும் யாழ் மாநகரின் முன்னாள் பிரதி முதல்வருமான இளங்கோ றீகன் ஆகியோர் தேடுதல் நிலைமைகள் குறித்து அவதானம் செலுத்தியிருந்ததுடன் இருவரது தேடும் முயற்சிகளை மேலும் விரிவாக்கும் வகையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினது கவனத்துக்கும் கொண்டுசென்று தேடுதல் நடவடிக்கையை விரிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|
|


