கடலில் சேதமடையும் கடற்றொழில் வள்ளங்களுக்கு நிவாரணம்!

Friday, May 24th, 2019

கடற்தொழில் நடவடிக்கையின் போது கடலில் சேதமடையும் கடற்தொழிலாளர்களின் வள்ளங்களுக்கு பதிலாக புதிய கடற்தொழில் வள்ளங்களை கொள்வனவு செய்வதற்காக செலவாகும் தொகையில் 50 சதவீதத்தை நிவாரணமாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் திலீப்வெத ஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.

தற்பொழுது 55 அடி நீளமான புதிய கடற்தொழில் வள்ளத்தை கொள்வனவு செய்வதற்கு 50 சதவீத நிவாரண நிதி வழங்கப்படுகின்றது. இருப்பினும் கடற்தொழில் நடவடிக்கையின் போது கடலில் சேதமாகும் கடற்தொழில் வள்ளங்களுக்காக இதுவரையில் நிவாரணங்கள் வழங்கப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான கடற்தொழில் வள்ளங்கள் தொடர்பிலும் பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்களுக்காக நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம் தொடர்பிலும் கவனம் செலுத்தி இருப்பதாகவும் அரசாங்கம் இதற்காக 50 சதவீத நிவாரணத்தை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: