கடற்தொழிலாளிகளை பதிவுகளை மேற்கொள்ளுமாறு நீரியல் வள திணைக்களம் பணிப்பு!

Friday, December 22nd, 2017

யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்தில் பதிவு மேற்கொள்ளப்படாத கடற்தொழிலாளர்களை விரைந்து பதிவை மேற்கொள்ளுமாறு கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களத்தினர் அறிவித்துள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 20 ஆயிரத்துக்கம் மேற்ப்பட்ட கடற்தொழிலாளர்கள் உள்ளனர். எனினும் 7 ஆயிரம் தொழிலாளிகளே யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்தில் பதிவை மேற்கொண்டுள்ளனர் எனத் தெரியவருகின்றது.

இது தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்ததாவது:

யாழ்ப்பாண மாவட்டத்தில் இருக்கின்ற கடற்தொழிற்; குடும்பங்கள் பதிவுகளை மேற்கொண்டால் மட்டுமே அவர்களுக்கான சலுகைகள் மற்றும் மானியங்களை வழங்க முடியும். எனவே இதுவரை பதிவுகளை மேற்கொள்ளாத கடற்தொழிற்குடும்பங்கள் விரைந்து பதிவுகளை மேற்கொள்ளவும்.

கடற்தொழிற்க்குடும்பங்கள் பதிவுகளை மேற்கொள்ள ஆர்வம் காட்டாது விடுவதால் அவர்களுக்கான சலுகைகளை அவர்களே கைநளுவ விடுகின்ற நிலைமை ஏற்ப்படுகின்றது. அண்மையில் கூட கடற்தொழிலுக்குச்சென்ற இரண்டு கடற்தொழிலாளர்கள் கடலில் வீழ்ந்து உயிரிளந்துள்ளனர். அவர்களுக்கான இழப்பீட்டுத்தொகையை அவர்களின் குடும்பங்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவெடிக்கையை நாம் எடுத்த போதிலும் அவர்கள் கடற்தொழிற் குடும்பம் என தங்களை பதியாத காரணத்தினால் இன்றுவரை அவர்களுக்குரிய காப்புறுதி பணத்தைப் பெற்றுக்கொடுப்பதில்  பெரிய சிரமங்களை எதிர் நோக்கியுள்ளோம். ஆகவே கடற்தொழிலாளர்கள் தங்களின் பதிவுகளை கடற்தொழிற்சங்கங்களின் ஊடாக மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளன .

Related posts: