கடன் மீள்கட்டமைப்பு நடவடிக்கையால் மக்களின் வங்கிக் கணக்குகளிலுள்ள வைப்புகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது – இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய தெரிவிப்பு!
Tuesday, June 27th, 2023
உள்நாட்டு கடன் மீள்கட்டமைப்பு நடவடிக்கையால் மக்களின் வங்கிக் கணக்குகளிலுள்ள வைப்புகளுக்கோ அவற்றின் வட்டி வீதங்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாதென ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
மக்களின் ஊழியர் சேமலாப நிதியத்திற்கோ ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்திற்கோ ஓய்வூதியத்திற்கோ இதனால் எந்த பாதிப்பு ஏற்படாது.
கடன் மீள்கட்டமைப்பு என்பது குறைப்பு செய்யும் நடவடிக்கை அல்ல. இதன்மூலம் கடனை பிற்போடுவது கடனை குறைப்பதுரூபவ் கடன் செலுத்தும் கால எல்லையை நீடிப்பது போன்ற செயற்பாடுகள் இடம்பெறுவதாக ராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை கடன் மீள்கட்டமைப்பு நடவடிக்கை மூலம் மக்களின் வங்கிக் கணக்குகளிலுள்ள வைப்புகளுக்கோ அவற்றின் வட்டி வீதங்களுக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படாதென மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவும் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|
|


