கடன் மறுசீரமைப்பு முறை ஏப்ரல் மாதத்திற்குள் அறிவிக்கப்படும் – மத்திய ஆளுநர் தெரிவிப்பு!
Friday, March 10th, 2023
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முறை ஏப்ரல் மாதத்திற்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
வணிக கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்த நம்புவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வழங்கப்படவுள்ள நிதிப் பொதி குறித்த முதலாவது மீளாய்வு 6 மாதங்களில் மேற்கொள்ளப்படும் எனவும் அதற்கு முன்னர் இது தொடர்பான கலந்துரையாடல்கள் தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி வரையில் இலங்கைக்கு இந்த நீடிக்கப்பட்ட நிதி வசதி கிடைக்கும் என ஊகிக்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது - இராணுவத் தளபதி சவேந்திர சில்வா!
பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது - அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு!
தாமதக் கட்டணமின்றி 950 சரக்கு கொள்கலன்களை விடுவிக்க நடவடிக்கை!
|
|
|


