தாமதக் கட்டணமின்றி 950 சரக்கு கொள்கலன்களை விடுவிக்க நடவடிக்கை!

Friday, October 14th, 2022

கொழும்பு துறைமுகத்தில் ஏற்படும் நெரிசலைத் தடுக்கும் நடவடிக்கையாக 950 சரக்குக் கொள்கலன்களை தாமதக் கட்டணமின்றி விடுவிக்க நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தீர்மானித்துள்ளார்.

கொழும்பு துறைமுகம் மற்றும் சுங்க அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இராஜாங்க அமைச்சர் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளார்.

இதனால், பல வருடங்களாக சுங்கத் திணைக்களம் வைத்திருந்த ஒரு மில்லியன் கிலோகிராம் அரிசியை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: