கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை உரிய முறையில் மேற்கொள்ள வேண்டும் – இலங்கைக்கு அமெரிக்கா அழைப்பு!
Tuesday, March 21st, 2023
சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் மற்றும் பொருளாதாரப் பாதையில் செல்வதை உறுதி செய்வதற்காக கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை உரியமுறையில் மேற்கொள்ளுமாறு இலங்கைக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
இலங்கையின் சர்வதேச நாணய நிதியப் பொதிக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதை அவர் வரவேற்றுள்ளார்.
இது ஒரு சிறந்த செய்தி என்றும் பொருளாதார மீட்சிக்கான பாதையில் இது ஒரு முக்கியமான கட்டம் என்றும் அவர் கூறியுள்ளார்
இலங்கை அரசாங்கம் சீர்திருத்தங்களைத் தொடர வேண்டும் மற்றும் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நிறைவுச்செய்ய வேண்டும்.
நல்லாட்சி மற்றும் வெளிப்படைத்தன்மை, நீடித்த சீர்திருத்தங்கள் போன்றவை, இலங்கையின் அனைத்து குடிமக்களும் நன்மை பெறுவதை உறுதிசெய்வதற்கு மிகவும் முக்கியமானவை என்றும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சர்வதேச நாணய நிதிய திட்டத்தை செய்ததன் பின்னர் தாம் ‘நிம்மதி’ அடைந்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான நிதி ஒப்புதலை அடுத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் வேறுபாடுகள் இருந்தபோதிலும் இந்த பணியை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க மற்றும் மத்திய வங்கியின் செயல்பாட்டில் உள்ள நிபுணத்துவம் பாராட்டப்பட வேண்டும்’ என்றும் ஹர்ஷ டி சில்வா ட்வீட் செய்துள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு இதனை முன்னைய அரசாங்கம் செய்திருந்தால் மக்கள் இந்தளவு துன்பப்பட்டிருக்க மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்போது மிகவும் குறைவான வலியுடன் இலங்கை மக்கள் வெளியே வந்திருக்கலாம்.
எனினும் அவர்களின் ஆணவமும் பேராசையும் இறுதியாக நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றது. கடன் மறுசீரமைப்பு கடினமாக இருக்கும் அதேவேளை, சீர்திருத்தமும் முக்கியமானதாகும்.
எனவே சுவர்களை உடைத்து உலகிற்கு பாலங்களை அமைப்பதே நிலையான தீர்வாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
|
|
|


