கடன்கள் திருப்பிச் செலுத்தப்படும் – நிதி அமைச்சு அறிவிப்பு!

Friday, November 23rd, 2018

இலங்கை கடன் சேவை முறைக்குக் களங்கம் ஏற்படுத்தாத வரலாற்றைக் கொண்ட நாடு என்ற வகையில் இந்த உயர்வான நிலைப்பாட்டை தொடர்ந்தும் அரசு முன்னெடுத்துச் செல்லுமென்று நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு கூறியுள்ளது.

இது குறித்து நிதியமைச்சு வெளியிட்ட அறிக்கையில்:

இதற்கமைய நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்கள் உரிய முறையில் திருப்பிச் செலுத்தப்படவிருக்கின்றன. இலங்கைக் குடியரசின் சகல கடன் வழங்குநர்களுக்கும் உரிய தினத்துக்கு முன்னர் கடன்கள் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளன.

அடுத்த வருடம் செலுத்த வேண்டியிருக்கும் சர்வதேச இறைமை பிணை முறி தொடர்பான 1500 மி;ல்லியன் டொலர்கள் பெறுமதி வாய்ந்த கடனும் திருப்பிச் செலுத்தப்படவுள்ளது.

இதற்குப் பொறுப்பான நிதி மத்திய வங்கியின் ஒதுக்கத்தில் காணப்படுகிறது. இதற்கென மத்திய வங்கி நெருக்கமான முறையில் செயற்பட்டு வருகிறது.

Related posts:

500 பேருக்கு மேல் பி.சி.ஆர் பரிசோதனை - முல்லையில் 3 தனிமைப்படுத்தல் நிலையங்கள் மூடப்படுகின்றன - பிரா...
சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க துரித முயற்சிகள் முன்னெடுப்பு - இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அ...
சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்துவிற்கான அழைப்பாணையை செல்லுபடியற்றதாக்க மேன்முறையீட்டு நீதி...