கடந்த 10 வருடங்களில் 27 ஆயிரம் பேர் வீதி விபத்துகளில் பலி – யுத்தத்தில் உயிரிழந்தவர்களை விட விபத்துக்களில் உயிரிழந்தவர் எண்ணிக்கை மிக அதிகம் – அமைச்சர் சரத் வீரசேகர சுட்டிக்காட்டு!
Friday, October 15th, 2021
கடந்த 10 வருடங்களில் 27 ஆயிரம் பேர் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நடைப்பெற்ற 30 வருடப் போரில் கூட 29 ஆயிரம் பேர் மாத்திரமே உயிரிழந்துள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வீதி விபத்துகள் தொடர்பாக அமைச்சர் சரத் வீரசேகர மேலும் கூறியுள்ளதாவது,
“ஜனவரிமுதல் இதுவரை ஆயிரத்து 760 பேர் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். போக்குவரத்து விதிமீறல்கள், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் அதிவேகம் காரணமாக இந்த உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.
மேலும் போதைப்பொருளை பயன்படுத்துபவர்கள்தான் அதிக வேகத்தில் வாகனங்களை செலுத்துகின்றனர்.
அதனை பரிசோதிக்க எந்த உபகரணமும் இல்லை. ஆகவே அந்த உபகரணங்களை விரைவில் கொண்டு வருவோம்” எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
கொழும்பில் ஆறாவது ஆசிய அபிவிருத்தி மாநாடு
யாசகர்களைப் பிடித்து அகற்ற ரயில் நிலையங்களில் நடவடிக்கை!
சங்கானை கிழக்கில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மக்கள் குறைகேள் சந்திப்பு!
|
|
|


