கடந்த அரசாங்கத்தால் ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவு தவறானது – இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் சுட்டிக்காட்டு!

Saturday, May 29th, 2021

கொழும்பு போர்ட் சிட்டி நிலம் இலங்கைக்கு சொந்தமானது என்றும், அதில் ஒரு பகுதி மட்டுமே சீனாவுக்கு 99 ஆண்டு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு இலங்கையின் முன்னாள் அரசாங்கமே வழங்கியது. துறைமுகம் கடன் வலையில் சிக்கியுள்ளதால் அதைக் கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று முன்னாள் அரசாங்கம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டள்ளார்.

இது குறித்து நிதி மற்றும் மூலதன சந்தைகள், பொது நிறுவன சீர்திருத்தங்கள் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் செய்தியாளர்களிடம் மேலும் கூறுகையில் –

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு வழங்குவது தவறான நடவடிக்கை என்று அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் கடந்த அரசாங்கத்தால்  எடுக்கப்பட்ட முடிவு தவறான நடவடிக்கை என்று தற்போதைய அரசாங்கம் உணர்கிறது என்றும் இது போன்ற கொள்கையை ஒருபோதும் தற்போதைய அரசாங்கம் பின்பற்றாது என்றும் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: