130 கோடி ரூபாவில் நாடெங்கும் 1,223 பாடசாலைகளுக்கு உதவி  – கல்வி அமைச்சு வழங்கும்!

Friday, March 2nd, 2018

நாடளாவிய ரீதியில் முறையான குடிநிர் சுகாதார வசதிகள் இன்றி இயங்கம் 1223பாடசாலைகளுக்கு மேற்படி வசதிகளை வழங்குவதற்காக கல்வி அமைச்சு இவ்வருடம் 1.3 பில்லியன (130 கோடி) ரூபாவை செலவிடவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் கெட்டியாராச்சி தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் வழங்கப்படுவது தொடர்பாக மேற்கொள்ளப்படுவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது மேற்படி 1223 பாடசாலைகளும் இனங்காணப்பட்டுள்ளதுடன்    இப் பாடசாலைகள் தமக்கான் குடிநீரை கிணறுகள் ,நீரோடைகளில் இருந்து பெற்று வருவதும் கண்டறியப்பட்டுள்ளது. முறையான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் அற்ற பாடசாலைகளாக வடமேல் மாகாணத்தில் 228 உம் மத்திய மாகாணத்தில் 226 உம் வட மேல் மாகாணத்தில் 178 உம் ஊவா மாகாணத்தில் 134 உம் சப்பிர கமுவ  மாகாணத்தில் 126 உம் கிழக்கு மாகாணத்தில் 125 உம் வட மாகாணத்தில் 103 உம் தென் மாகாணத்தில் 53 உம் மேல் மாகாணத்தில் 37 பாடசாலைகளும் கண்டறியப்பட்டுள்ளன.

தற்போது நாடளாவிய ரீதியில் 4161 பாடசாலைகள் கிணறுகள் ழூ லம் பம்பப்படும் நீர் வசதிகளையும் 4,200 பாடசாலைகள் குழாய்  நீர் மூலமான நீரையும் பெற்று வருவதுடன் 90 பாடசாலைகள் பவுசர் மூலம் நீர் வசதிகளை பெற்று வருகின்றன இனம் காணப்பட்ட 1223பாடசாலைகளுக்கு குடிநீர் வசதிகளை வழங்கவதற்கான நிதியை ஜனாதிபதி நிதியம் மூலம் கல்வியமைச்சு பெற்றுக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: