கச்சத்தீவுக்கு அருகில் மீன்பிடியில் ஈடுபட்ட 4000 தமிழக மீனவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பியது இலங்கை கடற்படை !
Sunday, October 18th, 2020
இலங்கைக்கு சொந்தமான கச்சத்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 4000 மீனவர்கள் கடற்படையினரால் எச்சரிக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழகம், ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கடற்படையினரால் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
எனினும் தாங்கள் இலங்கைப் படையினரால் விரட்டியடிக்கப்பட்டதாக ராமேஸ்வரம் மீனவர்கள் குற்றம் சுமத்தினர்.
இது தொடர்பாக இலங்கை கடற்படையினர் கூறுகையில் குறித்த கடறங்றொழிலாளர்கள் சட்டவிரோதமான முறையில் இலங்கை எல்லையை கடக்க முயற்சித்த போதே எச்சரித்து திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
புதிய பயங்கரவாத தடைச் சட்ட விவாதம் அடுத்த வாரம்- பிரதமர்!
ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!
குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை 40 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத...
|
|
|


