கச்சதீவு அந்தோனியார் ஆலய பெருவிழா தொடர்பான ஆரம்ப கலந்துரையாடல்!

Tuesday, February 7th, 2017

கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 12 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா ஏற்பாட்டிற்கான ஆரம்ப கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலின் போது, ஆலயத்திற்கு வருகை தரவுள்ள பக்தர்களின் எண்ணிக்கைகள் அதிகமாக காணப்படுமென்றும், போக்குவரத்து மற்றும், தங்குமிட வசதிகளை ஏற்பாடு செய்யுமாறு அனைத்து தரப்பினருக்கும் பணிக்கப்பட்டுள்ளது.

11 ஆம் திகதி குறிகட்டுவானில் இருந்து வடதாரகை மற்றும் குமுதினி படகுகள் இதனைத்தவிர கடற்படையின் படகுகளும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

அத்துடன், கடற்படையினர் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் தங்குவதற்கான மற்றும் விசேட அதிதிகள் தங்குதவதற்கான ஏற்பாடுகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளனர்.

தனியார் மற்றும் போக்குவரத்துச் சேவைகள் யாழ்ப்பாணத்தில் இருந்து குறிகட்டுவான் வரைக்கும் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அன்றையதினம் படகுச் சேவைகள் ஒரு வழிக்கு மட்டும் 275 ரூபா அறவிடுமாறு படகுச் சேவையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகளிற்கான கட்டணமாக 72 ரூபாவும் அறவிடப்படும்.

அத்துடன், பக்தர்களுக்கான தங்குமிடம், தண்ணீர், உணவுகள், மலசலகூட வசதிகள் அனைத்தும், பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகம், கடற்படையினர் ஏற்பாடுகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளதுடன், அங்கு வரும் பக்தர்களின் பாதுகாப்புக் கருதி பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

11 ஆம் திகதி மாலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் பூசை ஆரம்பிக்கப்பட்டு 12 ஆம் திகதி காலை திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது. இலங்கை மற்றும் இந்திய பக்தர்கள் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்திற்கு வருகை தருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

402971360kachadivv-LLL

Related posts: