ஓய்வூதியப் பதிவிற்கான கால எல்லை 31 ஆம் திகதியுடன் நிறைவு!
Tuesday, July 10th, 2018
அனாதைகள் மற்றும் விதவைகள் ஓய்வூதியம் கொடுப்பனவு முறையின் கீழ், மீள பதிவு செய்வதற்காக வழங்கப்பட்ட கால எல்லை எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
இதுவரையில் மூன்று இலட்சத்து 80 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர் என்று ஓய்வூதிய கொடுப்பனவு பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸ் தெரிவித்தார்.
வெகு விரைவில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதுடன் தற்பொழுது ஓய்வூதியம் பெறும் அரச சேவையாளர்கள் இதற்காக மீள பதிவு செய்ய வேண்டியதில்லை.
அரச சேவையில் இருப்போர் மாத்திரமே பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். விதவைகள் உள்ளிட்டோர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு முறைமைகளை முறையாக முன்னெடுக்கும் பொருட்டு இணையத்தள தரவு கட்டமைப்பு ஒன்றை அமைப்பதே இதன் நோக்கமாகும். இதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஓய்வூதிய கொடுப்பனவு ஆணையாளர் நாயகம் ஜகத் டயஸ் மேலும் கூறினார்.
Related posts:
புதிய பயணிகள் நிழற்குடைக்கான அடிக்கலை முன்னால் மாகாணசபை உறுப்பினர் வை தவநாதன் நாட்டிவைத்தார்!
மின் துண்டிப்பிற்கு சதிவேலையா காரணம்? - மின்சாரசபையின் தலைவர் பொலிஸில் முறைப்பாடு!
உள்ளூராட்சி திருத்தச் சட்டமூலங்களில் உள்ள சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை அல்ல - உச்ச நீதி...
|
|
|


