ஓய்வு பெறும் வயதெல்லை 67 ஆக உயர்வு!
Tuesday, March 6th, 2018
அரசாங்க ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 67 ஆக உயர்த்தப்படவுள்ளது.
அரசாங்க ஊழியர்கள் முழு அளவில் ஓய்வுறுத்தப்படக்கூடிய வயது எல்லையை 67 ஆக நிர்ணயம் செய்வது குறித்த புதிய சுற்று நிருபமொன்று வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி என திகதியிடப்பட்டு இந்த சுற்று நிருபம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
2007 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சுற்று நிருபத்தில் அரச ஊழியர்களின் ஓய்வு பெற்றுக் கொள்ளும் வயதெல்லை 60 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
எனினும் புதிய சுற்று நிருபத்தின் அடிப்படையில் அரசாங்க சேவையில் நீடித்திருக்கக்கூடிய உச்சபட்ச வயதெல்லை 67 ஆக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாடசாலையைத் திறப்பேனே தவிர சிறைச்சாலையைத் திறக்கமாட்டேன் - ஜனாதிபதி!
வாக்களிப்பதை தவிர வேறெந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடுவதற்கு உரிமை இல்லை - பாதுகாப்பு அமைச்சு !
நடமாட்டக் கட்டுப்பாடு தினங்களில் பொருளாதார மத்திய நிலையங்களும் மூடப்படும்!
|
|
|


