ஓய்வு பெறவுள்ள பிரதம நீதியரசரின் சேவைக்கு ஜனாதிபதி பாராட்டு!
Sunday, February 26th, 2017
தமது பதவியிலிருந்து ஓய்வு பெறவுள்ள பிரதம நீதியரசர் கே. ஸ்ரீ பவனின் சேவையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராட்டியுள்ளார்.
பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய நீதிமன்றக் கட்டிடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில்கலந்து கொண்ட போதே ஜனாதிபதி, பிரதம நீதியரசரை பாராட்டியதுடன் பக்கச்சார்பற்ற, சுயாதீன நீதிக் கட்டமைப்பொன்றை முன்னெடுப்பதற்கு சமகால அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகும் தெரிவித்தார்.
38 கோடி 20 ,லட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்தக் கட்டிடத் தொகுதிக்கு ஜனாதிபதி தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது.
நீண்டகாலமாக பொலன்னறுவை நீதிமன்ற அலுவலகம் இடவசதி பிரச்சினைக்கு மத்தியில் செயற்பட்டு வந்தது. இதற்குத் தீர்வாகவும், நீதித்துறை சிறப்பான முறையில் முன்னெடுப்பதற்குமாக
இந்தப் புதிய நீதிமன்ற கட்டிடத் தொகுதி அமைக்கப்படுகிறது. நீதவான், மாவட்ட மற்றும் மேல் நீதிமன்றங்கள், நீதிபதிகளின் உத்தியோகபூர்வ
இல்லங்கள், ஆவணப் பிரிவு, தொழில் நியாய சபை, சட்டத்தரணிகளின் அலுவலகம், ஆகியவற்றையும், நவீன வசதிகளைக் கொண்டதாகவும்
இது நிர்மாணிக்கப்படுகின்றது. கடந்த 2 வருட காலப்பகுதியில் நீதித்துறை மீது தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் குற்றங்கள் சுமத்தப்படாத வகையில், பணிகளை முன்னெடுக்கப்பட்டமை குறித்து ஜனாதிபதி என்ற ரீதியில் தாம் பெரும் மகிழ்ச்சியடையவதாகவும் ஜனாதிபதி ,ங்கு தெரிவித்தார்.
நீதித்துறையில் அனைவருக்கும் சுதந்திர மனநிலையிலும் திருப்தியான வகையிலும் தமது பணிகளை நிறைவேற்றக்கூடிய சூழலை முன்னெடுப்பதற்கான பொறுப்புக்களை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றி வருவதாகவும் ஜனாதிபதி கூறினார்.

Related posts:
|
|
|


