ஓமானில் விபத்துக்குள்ளான கப்பலில் கடமையாற்றிய மூன்று இலங்கைப் பணியாளர்கள் உள்ளிட்ட 16 பணியாளர்களை காணவில்லை என தகவல்!!

ஓமானில் விபத்துக்குள்ளான கப்பலில் கடமையாற்றிய மூன்று இலங்கைப் பணியாளர்கள் உள்ளிட்ட 16 பணியாளர்களை காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் காணாமல் போயுள்ள ஏனையவர்கள் இந்தியர்கள் என கூறப்படுகின்றது. யேமனின் ஏடன் நகர் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பிரஸ்டிஜ் பெல்கொன் என்ற கப்பலே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
கமரூன் நாட்டு கொடியுடன் பயணித்த எண்ணெய்த் தாங்கிக் கப்பல் ஒன்றே குடைசாய்ந்து, கடலில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கப்பலில் பயணித்த பணியாளர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
000
Related posts:
உலகப் போராட்ட வரலாறுகளில் எங்குமே நடந்திருக்காத அர்ப்பணங்களை ஈழப்போராட்டத்தில் ஆற்றிய நம் தலைவர்கள்!...
கஹகொல்ல பகுதியில் பேருந்துக் குண்டு வெடிப்புச் சம்பவத்தை அரசாங்கம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாத...
உள்ளுராட்சி தேர்தலுக்கு 10 பில்லியன் செலவாகும் - நிதி கேட்டு விண்ணப்பித்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் சம...
|
|