ஒரேநாளில் 37 பேருக்கு கொரோனா தொற்று – இலங்கையில் மொத்த எண்ணிக்கை 3,049 ஆக பதிவு!

Tuesday, September 1st, 2020

கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் இலங்கையில் 37 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 49 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய இருவரும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய இருவரும் உள்ளடங்குவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் 32 பேர் கட்டாரில் இருந்து நாடு திரும்பியவர்கள் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த  2 ஆயிரத்து 868 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். அதேநேரம் இந்த தொற்றுக்கு உள்ளான 169 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும் இலங்கையில் இதுவரையில் 12 பேர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, நாட்டில் இதுவரையில் 2 இலட்சத்து 26 ஆயிரத்து 111 பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


தேர்தல் கால கூட்டுக்களால் மக்களுக்கு உருப்படியான எதுவும் கிடைக்கப்போவதில்லை – தோழர் ஸ்டாலின்!
சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தைகள் எதிர்காலத்தில் மீண்டும் ஆரம்பிக்கப...
சர்வதேச விசாரணை இடம்பெற்றால், அதனை முழுமையாக ஏற்றுக் கொள்வோம் - சனல் 4 காணொளி தொடர்பில் பொதுஜன பெரமு...