ஒரு வாரத்திற்குள் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் – பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் 2 ஆம் திகதி இறுதி தீர்மானம் – கல்வி அமைச்சர் அறிவிப்பு!
Wednesday, April 28th, 2021
2020 ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 7 நாட்களுக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் உள்ள 2, ஆயிரத்து 648 பரீட்சை மத்திய நிலையங்களில் கடந்த ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதிமுதல் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரையில் உயர்தர பரீட்சைகள் இடம்பெற்றிருந்தது.
இம்முறை பரீட்சைக்காக 3 இலட்சத்து 62 ஆயிரத்து 824 பரீட்ச்சார்த்திகள் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் நாடளாவிய ரீதியில் உள்ள பல்கலைகழகங்கள் மே மாதம் 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான இறுதி தீர்மானத்தை எதிர்வரும் மே 2 ஆம் திகதி எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
யாழ். குடாநாட்டின் சில இடங்களில் இன்றும் மின்தடை!
அனைத்து பல்கலைக்கழகங்களும் “ஸ்மார்ட் பல்கலைக்கழகங்களாக” மாற்றப்படுவது அவசியம் - ஜனாதிபதி ஆலோசனை!
தனக்கு தானே தீ மூட்டி பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு - யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் ச...
|
|
|


