அனைத்து பல்கலைக்கழகங்களும் “ஸ்மார்ட் பல்கலைக்கழகங்களாக” மாற்றப்படுவது அவசியம் – ஜனாதிபதி ஆலோசனை!

Saturday, January 16th, 2021

புதிய இயல்பு நிலையின் கீழ் உழைப்பின் மகிமையைப் பாதுகாக்கும் மற்றும் திறன்கள் நிறைந்த ஒரு சமூகத்தை உருவாக்கக் கூடிய கல்வி முறை அறிமுகப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி கோத்தாப ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

அத்துடன் விரைவான அபிவிருத்திக்காகவும், குறுகிய காலத்தில் எதிர்பார்க்கப்படும் பொருளாதார இலக்குகளை அடையவும் தேசிய கல்வி கொள்கை ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் நீர்கொழும்பில் உள்ள 16 ஆவது பெனடிக்ட் கத்தோலிக்க உயர் கல்வி நிறுவனத்தில் இடம்பெற்ற பட்டப்படிப்புகளைப் பதிவு செய்வதற்கான ஆரம்ப விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் பல்கலைக்கழக கல்வியின் தரத்தைச் சிறந்த தரத்திற்கு உயர்த்துவதற்கு அதிக முன்னுரிமை அளிப்பதே தனது நோக்கம் எனவு தெரிவித்துள்ள ஜனாதிபதி அனைத்து பல்கலைக்கழகங்களையும் “ஸ்மார்ட் பல்கலைக்கழகங்களாக” மாற்றுவதன் அவசியத்தையும், தொழில்நுட்ப அறிவு நிறைந்த எதிர்கால தலைமுறையை உருவாக்குவதன் அவசியத்தையும் சுட்டிக் காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: