நிலத்தடி தொட்டி அமைத்து கழிவு நீர் விடப்பட வேண்டும் என யாழ்ப்பாண மாநகர குடியிருப்பாளர்களிடம் கோரிக்கை!

Friday, March 10th, 2017

யாழ்ப்பாண மாநகரப் பகுதியில் உள்ள மக்கள் தமது வீட்டுக்கழிவு நீரை கால்வாய்களில் சேர்ப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். மீறி கழிவு நீரை கல்வாய்களில் சேர்ப்போர் மீது மாநராட்சி மன்றம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என யாழ்ப்பாண மாநகர ஆணையாளர் பொ. வாகீசன் தெரிவித்துள்ளார்

பொதுமக்கள் தமது குடியிருப்புப் பகுதியில் நிலத்தடி கழிவு நீர் சேகரிக்கும் தொட்டி ஒன்றை அமைத்து அதற்குள் வீட்டுக் கழிவு நீரை விட வேண்டும் எனவும் யாழ்ப்பாண மாநகர ஆணையாளர் பொ. வாகீசன் தெரிவித்துள்ளார்

வெள்ள வாய்க்கால்களில் இந்த கழிவு நீர் விடப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகின்றது. இத்துடன் குளங்களில் சென்றும் குளத்து நீருடன் கலக்கின்து.  மழைக் காலங்களில் வெள்ளம் வழிந்தொடுவதற்காக அமைக்கப்பட்ட இந்த வெள்ள வாய்க்கால்களில் கழிவு நீர் விடுவது தவிர்க்கப்பட வேண்டும் கரையோரப் பகுதி மக்கள் கூடுதலாக தமது குடியிருப்புக் கழிவு நீரை வடிகால்வாய்களில் விடுகின்றனர். அவர்களில் குடியிருப்புகளில் இதற்கான கழிவு நீரை சேகரிப்பதற்கான தொட்டி அமைப்பதற்கு இடவசதி போதாது இதன் காரணத்தால்தான் அப்பகுதி மக்களின் வீட்டுக் கழிவு நீர் வேறு வழிகளால் அப்புறப்படுத்துவதற்கும் மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கும் ஆலோசிக்கப்படுகிறது

மாநகரப் பகுதியில் கூடுதலான வெள்ள வாய்க்கால்களில் இவ்வாறு கழிவு நீர் விடப்படுவதால் அதில் இருந்து நுளம்புகளின் பெருக்கம் ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாண நகரில் வைத்தியசாலைச் சந்தி, ஆரியகுளம் சந்தி, முன்னீஸ்வரன் சாலை, கந்தப்பசேகரம் சாலை போன்ற இடங்களில் உள்ள வெள்ள வாய்க்கால்களில் கழிவு நீர் அதிகளவில் தேங்கிக் காணப்படுகின்றன என்று மாநகர ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

Related posts: