ஒரு வருட காலப்பகுதிக்குள் சகல வீடுகளிலும் தொலைத்தொடர்பு வசதிகள்!
Sunday, December 20th, 2020
வரவு செலவுத் திட்ட யோசனைகளை அமுல்படுத்தும் போது நாட்டின் அபிவிருத்தி தொடர்பாகவும் தொழில்வாய்ப்புகளை உருவாக்கும் நிகழ்ச்சித் திட்டம் குறித்தும் மிகுந்த கவனம் செலுத்தப்படுமென பொருளாதார அபிவிருத்தி, வறுமையொழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.
இரத்தினபுரியில் அமைந்திருக்கும் சப்ரகமுவ மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது பசில் ராஜபக்ஷ இதனைக் கூறியுள்ளார்..
அத்துடன் எதிர்வரும் வருடங்களில் இலங்கையில் சகல துறைகளையும் மேம்படுத்தி அபிவிருத்தி யுகத்தை ஏற்படுத்தும் வகையில், வேலைத்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு எனும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தில் இணையுமாறு கேட்டுக் கொண்டார்.
அதேவேளை எதிர்வரும் 12 மாத காலப்பகுதிக்குள் நாட்டிலுள்ள சகல வீடுகளிலும் தொலைத்தொடர்பு வசதிகளை ஏற்படுத்தப் போவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


