ஒரு கிலோ நெல் 70 ரூபா – நிர்ணய விலை நிர்ணயிக்க ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ ஆலோசனை என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அறிவிப்பு!
Monday, October 18th, 2021
எதிர்வரும் பெரும்போகத்தில் ஒரு கிலோ நெல்லை 70 ரூபாவுக்கு வழங்க ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஒரு வருடத்தில் பொதுவாக 03 நிறுவனங்களினூடாக 100 பில்லியன் உரம் இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்தியாவிடமிருந்து கோரப்பட்டுள்ள 30 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியில், ஒருதொகை நாட்டரிசி இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக வர்த்தகவும் அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம் அடுத்த தொகை இந்த மாத இறுதிக்குள் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கிளிநொச்சியில் 80 ஹெக்டேயரில் உபவுணவுச் செய்கை - மாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர்!
நயினாதீவிற்கு படகுகளில் செல்லும் பக்தர்கள் பாதுகாப்பு அங்கி கட்டாயம் அணிய வேண்டும் - வீதி அபிவிருத்த...
ஜூன் 9 ஆம் திகதி போராட்டக்காரர்களினால் ஜனாதிபதி மாளிகையில் ஏற்படுத்தப்பட்ட சேத விபரங்கள் தொடர்பான வி...
|
|
|


