ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு : துரித கதியில் முன்னெடுக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நடவடிக்கை!

Saturday, August 15th, 2020

பொது தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு இலட்சத்து 50 ஆயிரம் தொழில் நியமனத்திற்கான வேலைத்திட்டத்தினை தாமதமின்றி துரித கதியில் முன்னெடுக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.

குறித்த திட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு 50 ஆயிரம் வேலைவாய்ப்புக்கள் ஒதுக்கப்பட்டுள்ளதோடு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிலில் காணப்படுவோருக்கு ஒரு  இலட்சம் வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் நவம்பர் மாதம் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த வேலை திட்டம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பொது தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து குறித்த வேலைதிட்டத்தை நிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது பலமான அரசொன்று நாட்டில் உருவாகியுள்ளதை அடுத்து  நிறுத்தப்பட்ட இந்த வேலை திட்டத்தினை உடனடியா மீள ஆரம்பிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: