ஒரு இலட்சம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்க முயற்சி – அமைச்சர் நாமல் ராஜபக்ஷ!

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஒரு இலட்சம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட 59 விளையாட்டு வீரர்கள் தொழில் ரீதியில் ஒப்பந்தங்களில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் .
அத்துடன் மஹேல ஜெயவர்தன தலைமையிலான தேசிய விளையாட்டு பேரவையின் மூலம் தேசிய விளையாட்டுதுறையை மேம்படுத்துவதற்கான திட்டம் சமர்பிக்கப்பட்டிருப்பதாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டாரவின் கேள்விக்கு பதில் வழங்குகையிலேயே அமைச்சர் நாமல் ராஜபக்ச குறித்த விடயங்களை தெளிவுபடுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது .
Related posts:
கைபேசி, இணையத்தளம் ஆகியவற்றால் குற்றம் அதிகரிப்பு - பொலிஸ்மா அதிபர்!
ஏப்ரல் 8 இல் தொண்டர் ஆசிரியர் நேர்முகம் !
வவுனியா உள்ளிட்ட மேலும் 3 மாவட்டங்களில் ஒருநாள் கடவுச்சீட்டு வழங்கும் சேவை முன்னெடுப்பு - அமைச்சர் த...
|
|