ஒரு இலட்சத்து 60 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 6 ஆம் திகதி ஏலத்தில் – இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!
Saturday, March 2nd, 2024
ஒரு இலட்சத்து 60 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 6ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 40 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 60 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 60 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற அதிசொகுசு பேருந்து கோர விபத்து: நால்வர் பரிதாப பலி!
யாழ் பஸ் நிலையத்தில் மயக்கமடைந்த குடும்பஸ்தரை வைத்தியசாலை கொண்டு செல்லாததால் மரணம்!
தமிழ் பேசும் பெண் பொலிஸாரை சேர்த்துக் கொள்ள நடவடிக்கை!
|
|
|


