ஒமிக்ரோன் பரவலால் உலக பொருளாதார வளர்ச்சி குறைவடையும் – சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!

Monday, December 6th, 2021

புதிய கொரோனா ரகமான ஒமிக்ரோன் பரவுவதால், உலகப் பொருளாதார வளர்ச்சி வரும் காலங்களில் குறைய வாய்ப்புள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு 5.9 சதவீதமாகவும், அடுத்த ஆண்டு 4.9 சதவீதமாகவும் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப் படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா மற்றும் உலகின் வலுவான பொருளாதாரங் களைக் கொண்ட நாடுகளின் பொருளாதார வளர்ச்சியால் இந்த நிலைமை தீர்மானிக்கப்படும்.

இதுவரை, 40 நாடுகளில் புதிய ஒமிக்ரோன் கொரோனா வகை கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: