இரண்டு வாரத்தில் தேர்தல் பிரசாரத்திற்காக 700 மில்லியனுக்கும் அதிகமான மறைமுக செலவுகள் – தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் மையம் சுட்டிக்காட்டு!

Saturday, July 25th, 2020

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பிரதான கட்சிகளின் செலவீனங்கள் தொடர்பிலான தகவல்களை தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் மையம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.

முக்கிய அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் வரவிருக்கும் 2020 தேர்தலுக்கான பிரசாரத்திற்காக 700 மில்லியனுக்கும் அதிகமான மறைமுக செலவினங்களை இரண்டு வார காலத்திற்குள்  குறிப்பாக ஜூலை 2 முதல் 15 வரையான காலப்பகுதிக்குள் செலவிட்டுள்ளனர் என அந்த நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஏறத்தாள 7,500 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், அரசியல் கட்சிகளின்படி செலவினங்கள் குறித்து அறிக்கை தொகுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இந்த மதிப்பீடு 20-30 விகித செலவினங்களை மட்டுமே உள்ளடக்கியது என்றும், துல்லியமாக மதிப்பிடக்கூடியதை விட அரசியல் கட்சிகள் மிகப் பாரிய அளவிலான செலவினங்களைச் செய்கின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளாமை குறிப்பிடத்தக்கது.

Related posts: