ஒக்டோபர் 25 ஆம் திகதி நாடளாவிய ரீதியாக உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை – கல்வி இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு!

தீபாவளியை முன்னிட்டு ஒக்டோபர் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நாடளாவிய ரீதியாக உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி இராஜாங்க அமைச்சர் இந்த விடயத்தினை அறிவித்துள்ளார்.
எதிர்வரும் 24 ஆம் திகதி தீபாவளி தினம் என்பதால், அதனையடுத்த தினமான செவ்வாய்க்கிழமை மாணவர்களின் வரவில் வீழ்ச்சி காணப்படும் என்பதை கருத்திற் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அதற்கு பதிலீட்டு நாளாக ஒக்டோபர் 29 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலை நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
துயரம் நிறைந்த வாழ்விலிருந்த மக்களுக்கு நம்பிக்கை ஒளியை ஏற்றியவர்கள் நாம் - வேலணை பிரதேச சபை தவிசாள...
திருமண வீட்டுக்குச் சென்றவர் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு – பொலிஸார் திவிர விசாரணை!
அமைச்சர் டக்ளஸ் பணிப்புரை – கிளிநொச்சியில் வீதி விபத்துக்களை தடுக்கும் நடவடிக்கை நடைமுறையில்!
|
|