ஒக்டோபர் முதல் வாரத்தில் 26 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை – சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவிப்பு!

Thursday, October 12th, 2023

இந்த வருட ஒக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் 26 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, ஒக்டோபர் மாதத்தில் இதுவரை 26 ஆயிரத்து 272 வெளிநாட்டு பிரஜைகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

அக்டோபர் மாதத்தில் 6,293 இந்திய நாட்டு பிரஜைகள் வருகை தந்திருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் இதுவரை 1 இலட்சத்து 042 ஆயிரத்து 528 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

மேலும் 750 மில்லியன் டொலரை எரிபொருளுக்கு கடனாக வழங்கவுள்ளது இந்தியா - பணிகள் நிறைவடைந்து வருவதாகத் த...
கிறிக்கெற் சபைக்கான இடைக்கால குழு மற்றும் வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம...
ரணில் தயக்கம் காட்டினாலும் மக்கள் இன்னும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்கி அவரை ஜனாதிபதியாக நியமிக்க வேண்ட...