மேலும் 750 மில்லியன் டொலரை எரிபொருளுக்கு கடனாக வழங்கவுள்ளது இந்தியா – பணிகள் நிறைவடைந்து வருவதாகத் தகவல்!

Wednesday, March 30th, 2022

எரிபொருளுக்கான 500 மில்லியன் டொலர் கடன் வசதியை அதிகரிக்குமாறு இலங்கை விடுத்த கோரிக்கைக்கு இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி எரிபொருள் கொள்வனவு செய்வதற் காக வழங்க ஒப்புக்கொள்ளப்பட்ட 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி 750 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கான பணிகள் தற்போது நிறைவடைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்திய வெளிவிவகார அமைச்சருடன் கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பின் போது நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தக் கோரிக் கையை முன்வைத்துள்ளார்.

எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு இலங்கைக்கு மாதாந்தம் 500 மில்லியன் டொலர் தேவைப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


குற்றச்சாட்டுகள் உரிய விசாரணைகள் மூலம் நிரூபிக்கப்பட்டால் தராதரம் பாராது தண்டனை வழங்கப்படும் - வர்த்...
மக்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் - ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்...
கர்ப்பிணிகள் - பாலூட்டும் தாய்மார்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்க அனுமதி - மகப்பேற்று வைத்தியர்கள் ஆய...