ஒக்டோபர்முதல் 30 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கப்படும் – இராணுவத் தளபதி அறிவிப்பு!
Tuesday, August 17th, 2021
ஒக்டோபர் மாதம்முதல் 18 – 30 வயது வரை உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடத் திட்டமிடப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தற்போது, 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வெற்றிகரமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
செப்டம்பர் இறுதிக்குள் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இரண்டு டோஸூம் போட்டு முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்..
இதேவேளை, 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும், கட்டம் கட்டமாக கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
புதிய சம்பள கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட வேண்டும் - சிரேஷ்ட நிர்வாக அதிகாரி ஜினசிறி தடல்லகே!
யாழில் அதிகாலை நடந்த கோர விபத்து!
கொரோனா வைரஸானது 18 முதல் 24 மாதங்கள் வரை நீடித்திருக்கக்கூடியது – இதன் தாக்கம் 2022 வரை காணப்படும்!
|
|
|


