ஐ.நா மனித உரிமைப் பேரவை கூட்டத் தொடர் ஆரம்பம்!

Monday, February 25th, 2019

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது.

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ கட்ரஸ் ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் மிச்சல் பச்லெட் ஆகிய இருவரும் உரையாற்றவுள்ளதுடன், இதன்போது இவர்கள் இருவரும் இலங்கையின் விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோன்று இன்று ஆபிரிக்க ஒன்றியத்தின் பிரதிநிதி, அயர்லாந்து, அவுஸ்திரேலியா மற்றும் நோர்வே நாடுகளின் பிரதிநிதிகளும் உரையாற்றவுள்ளனர்.

இன்று ஆரம்பமாகும் கூட்டத் தொடர் அடுத்த மாதம் 22 ஆம் திகதி நிறைவடையும். இதன்போது இலங்கை தொடர்பில் இரண்டு விவாதங்கள் நிகழ்த்தப்படவுள்ள தாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts:


தனிநபர்களின் நிவாரணத்திற்காக வழங்கப்பட்டிருந்த காலத்தை நீட்டிக்க இலங்கை மத்திய வங்கி முடிவு!
செட்டிகுளம் பிரதேச செயலாளரின் இடமாற்றத்தை இரத்து செய்ய கோரி மக்கள் ஆர்ப்பாட்டம் – சாதகமான பதில் பெற்...
கொழும்புத்துறைமுக நகரத்தின் தனித்துவமான வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள் – அனைத்து நாடுகளின் ...