ரஷ்யாவின் பிராந்திய இணைப்பை கண்டிக்கும் ஐ.நா – வாக்கெடுப்பில் இருந்து இலங்கை விலகல்!

Thursday, October 13th, 2022

உக்ரைனின் நான்கு பகுதிகளை இணைக்கும் ரஷ்யாவின் முயற்சிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், முன்னெடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் இலங்கை உள்ளிட்ட 35 நாடுகள் பங்கேற்கவில்லை.

ரஷ்யாவுக்கு எதிரான பிரேரணையொன்று ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பான வாக்கெடுப்பொன்று இலங்கை நேரப்படி இன்று வியாழக்கிழமை அதிகாலை நடத்தப்பட்டிருந்தது.

குறித்த வாக்கெடுப்பில், பிரேரணைக்கு ஆதரவாக 143 நாடுகளும் எதிராக 5 நாடுகளும் வாக்களித்தன.

இந்த நிலையில், இலங்கை, இந்தியா, சீனா பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட 35 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

இதேவேளை சர்வதேச விதிமுறைகளை மீறி ரஷ்யா செயற்பட்டிருப்பதாக பல்வேறு நாடுகள் தமது கண்டனங்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: