ஐவர் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சட்டமா அதிபர் உத்தரவு!
Wednesday, March 10th, 2021
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையினூடாக வெளிக்கொணரப்பட்ட சந்தேகநபர்கள் ஐவர் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா பொலிஸ்மா அதிபருக்கு இன்று உத்தரவிட்டுள்ளார்.
அபு ஹின்த், லுக்மன் தாலிப், அபு அப்துல்லா, ரிம்சான், சாரா ஜஸ்மின் ஆகியோர் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சட்டமா அதிபரால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் இணைப்பதிகாரி சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.
Related posts:
அரசியலமைப்பு தொடர்பான விவாதம் நாளை வரை நீடிப்பு!
வடக்கு உட்பட 13 மாவட்டங்களில் மின்னலுடன் கூடிய மழை பெய்யும் - மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் கட...
தற்போது நிலவும் நெரிசல் இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வரும் - நாட்டில் கடவுச்சீட்டு பெற காத்திர...
|
|
|


