50 நாட்டு கடற்படை இலங்கையில்!

Wednesday, October 17th, 2018

அடுத்த வாரம் அமெரிக்கா, இந்தியா மற்றும் சீனா முதலான நாடுகளின் கடற்படையினர் கொழும்பில் சந்திக்கவுள்ளனர்.
இலங்கை கடற்படையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாடு ஒன்றிலேயே அவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த மாநாட்டில் சீனா, அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன், ஜப்பான் மற்றும் மாலைதீவு அடங்கலாக 50 நாடுகளை சேர்ந்த 140 பேர் பங்குபற்ற உள்ளதாக கடற்படை தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் பியல் டி சில்வா தெரிவித்துள்ளார்.
கடற்படையினர் பூகோள ரீதியில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இதன்போது ஆராய உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் சீனாவின் வகிபாகம் குறித்து இந்தியாவும், அமெரிக்காவும் இதன்போது கரிசனைகளை வெளியிடும் என்றும், குறிப்பாக இலங்கையை தளமாக கொண்டு சீன கடற்படையின் செயற்பாடுகள் அமைவதற்கு வாய்ப்புள்ளதா என்பது குறித்தும் கரிசனை வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: