ஐரோப்பாவிலும் தமிழ் மொழி கலாசாரங்ளை வளர்த்தது யாழ்ப்பாணத் தமிழர்கள் தான் – யாழ்ப்பாணத்துக்கான முன்னாள் இந்தியத் துணைத் தூதுவர் நடராஜன் சுட்டிக்காட்டு!

Monday, August 21st, 2023

யாழ்ப்பாணத்திலிருந்து நான் சென்று ஐந்து வருடத்திற்கு மேலாகியும் யாழ்ப்பாண மக்களை மறக்கவில்லை. ஐரோப்பாவிலும் கூட நமது தாய்மொழி கலாசாரங்ளை வளர்த்தது யாழ்ப்பாணத் தமிழர்கள் தான் என முன்னாள் இந்தியத் துணைத் தூதுவர் ஸ்ரீமான் ஆ.நடராஜன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பரத ஆடல் அரங்கேற்றம் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு வந்த போது சில நண்பர்கள் யாழ்ப்பாணத்தை மறந்து விட்டீர்களா என கூறிய போது யாழ்ப்பாணம் எனது சொந்த வீடு எனப் பதிலளித்தேன்.

இந்தியாவில் தமிழ்நாட்டிலிருந்தாலும் அடிக்கடி யாழ்ப்பாணம் நினைவுக்கு வருகின்றது. தமிழ் எங்கிருந்து வருகின்றது என எமது மக்களுக்குத் தெரிகின்றது.

அங்கு தமிழ் கதைக்கும் போது இலங்கைத் தமிழ் மொழியில் ஜாடை உள்ளதாக சிலர் குறிப்பிட்டனர்.

ஐரோப்பாவிலும் கூட நமது தாய்மொழி கலாசாரங்ளை வளர்த்தது யாழ்ப்பாணத் தமிழர்கள் தான். எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: