ஐநாவின் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பம் !
Monday, September 13th, 2021
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ளது. குறித்த கூட்டத்ததொடர் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2 மணியளவில் ஜெனீவாவில் ஆரம்பமானது.
கூட்ம் ஆரம்பித்த முதலாவது நாளன்றே இலங்கை தொடர்பான மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை முன்வைத்திருந்தார்.
இமுன்பதாக லங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான தீர்மானமானது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரின்போது நிறைவேற்றப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த தீர்மானத்திற்கு அமைவாக இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த வாய்மூல அறிக்கையினை மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பட்ச்லெட் இன்றையதினம் முன்வைத்திருந்தார்.
இதேவேளை, இன்று ஆரம்பமாகியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடரானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே
இன்று ஆரம்பமாகியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடரில் யோசனைகள் நிறைவேற்றப்பட மாட்டதெனவும், பரிந்துரைகள் மாத்திரமே முன்வைக்கப்படும் எனவும் நீதியமைச்சின் ஆலோசகரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான யு.ஆர்.டி.சில்வா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கத.
000
Related posts:
|
|
|


