நெஞ்சு வலி: நடுக்கடலில் மீனவர் பலி!

Saturday, October 28th, 2017

கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவரொருவர் நடுக்கடலில் திடீர் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக மானிப்பாய்ப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். காக்கைதீவு கடலில் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது சக மீனவர்களுடன் வழமை போன்று குறித்த மீனவர் காக்கைதீவு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளார். நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது திடீர் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டுக் கடும் அவஸ்தைப்பட்டுள்ளார்.

உடனடியாகச் சக மீனவர்களால் காப்பாற்றப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் கையை விரித்து விட்டனர்.

இந்தச் சம்பவத்தில் யாழ். சுதுமலை சாவற்காட்டுப் பகுதியைச் சேர்ந்த தெய்வேந்திரம் சாந்தராஜா(வயது-44) என்ற இரு பிள்ளைகளின் தந்தையாரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.

Related posts:

யாழ். ஆஸ்பத்திரியில் தாயும் சேயும் மரணம் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் சோகம்
நாடு திறக்கப்பட்டாலும் இறுக்கமான கட்டுப்பாடுகள் நீடிக்கும் – இராஜயாங்க அமைச்சர் சுதர்சினி தெரிவிப்பு...
வாகனங்களுக்கான எரிபொருள் வாராந்த ஒதுக்கீட்டை உறுதி செய்வதற்காக எரிபொருள் பாஸ் முறைமை அறிமுகம் - எரிச...