ஏழு பேர் சீஷெல்ஸில் கைது!
Sunday, August 11th, 2019
இலங்கை மீனவர்கள் ஏழு பேர் சீஷெல்ஸில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பேருவளையிலிருந்து மீன்பிடித் தொழிலுக்காகச் சென்ற ஏழு மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீஷெல்ஸ் நாட்டு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது இந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மீன்பிடித் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த மீனவர்களை விடுவிப்பது தொடர்பிலான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
குற்றப்புலனாய்வுத் தகவல் மீளாய்வு மத்திய பணியகம் எனும் பெயரில் புதிய பிரிவு அமைக்க முடிவு!
தகவல் அறியும் சட்டத்தால் கோரும் தகவல்களை மறைக்காது வழங்குக! யாழ்ப்பாண மாவட்டச் செயலர்!
தொடரும் சீரற்ற காலநிலை - வடக்கில் சீரற்ற காலநிலையால் 96 குடும்பங்கள் பாதிப்பு!
|
|
|


