தொடரும் சீரற்ற காலநிலை – வடக்கில் சீரற்ற காலநிலையால் 96 குடும்பங்கள் பாதிப்பு!
Thursday, November 4th, 2021
கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் கன மழை மற்றும் வெள்ளத்தினால் வட மாகாணத்தில் 96 குடும்பங்களைச் சேர்ந்த 366 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பலத்த மழையால் யாழ்ப்பாண மாவட்டமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஊர்காவற்றுறை, தெல்லிப்பழை, பருத்தித்துறை, சங்கானை ஆகிய பகுதிகளில் 54 குடும்பங்களைச் சேர்ந்த 209 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஐந்து வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.
மன்னாரில் நானாட்டான் மற்றும் மாந்தை மேற்கில் 40 குடும்பங்களைச் சேர்ந்த 152 பேரும், முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பகுதியில் இரண்டு குடும்பங் களைச் சேர்ந்த 5 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை நீடிப்பு!
புதிய அமைச்சர்களை நியமிப்பதற்கான நடவடிக்கை ஆரம்பம்!
மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை ரஷ்ய - இந்திய கூட்டு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க தீ...
|
|
|


