ஏழு நாடுகளின் சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருவதற்கான இலவச விசா வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்!

Tuesday, October 24th, 2023

ஏழு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் வீசா இன்றி நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் வீசா இன்றி நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை தொடரும் முன்னோடித் திட்டத்தின் ஒருபகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகைத்தருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம் ஏழு நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு அழைத்துவரப்படுவார்கள் என அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது.

இதன்படி, குறித்த நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்தவுடன் வீசாக்களை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.

சுற்றுலா பயணிகளாக இலங்கைக்கு வருகைதரும் ஐந்து நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்களுக்கு அடுத்துவரும் மூன்று ஆண்டுகளுக்கு இலவச சுற்றுலா வீசாவினை வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் அண்மையில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் தினேஷ் குணவர்தன அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ, டிரான் அலஸ் மற்றும் அலி சப்ரி ஆகியோர் இணைந்து இந்த அமைச்சரவை பத்திரத்தினை சமர்ப்பித்துள்ளனர்.

இலங்கைக்கு அதிகளவான சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதனை நோக்கமாகக் கொண்டு இவ்வாறு பல்வேறு நாடுகளின் சுற்றுலா பயணிகளுக்கு இலவச வீசா வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டது.

இதன்படி, ஆண்டு ஒன்றுக்கு 5 மில்லியன் சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு வருகைத்தருவார்கள் என நம்பிக்கை கொண்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: