ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு – நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவிப்பு!
Wednesday, October 5th, 2022
2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏற்றுமதி வருமானம் 90 வீதமாக அதிகரித்துள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரையான காலத்தில் நாட்டின் மொத்த ஏற்றுமதி வருமானம் ஆயிரத்து 232.4 பில்லியன் ரூபா எனவும் அவர் கூறியுள்ளார்.
எனினும் இந்த காலப் பகுதியில் நாட்டின் மொத்த செலவானது 3 ஆயிரத்து 539 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.
தற்போது 8 வீதம் என்ற மட்டத்தில் காணப்படும் நாட்டின் தேசிய உற்பத்திக்கு இணையாக அரச வருமானம் 11 வீதமாக அதிகரிக்க வேண்டும் எனவும் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அரச மோட்டார் வாகனங்களை பயன்படுத்தும் அரச ஊழியர்கள் தங்களது பெயர்களில் அதனை பதிவு செய்வதற்கு சந்தர்ப்...
ஜூன்- ஜூலையில் டெங்கு நோய் பரவும் அபாயம்!
அடையாளம் தெரியாத ஏவுகணை பரிசோதனையை மேற்கொண்ட வடகொரியா -அச்சத்தில் உலக நாடுகள்!
|
|
|


